பெண் மேயர்களுக்கு திடீர் ஏற்றம் ; அ.தி.மு.க, ராஜ்யசபா வேட்பாளர்கள்

சென்னை: வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி பெண் மேயர்கள் 2 பேரும் ராஜ்யசபா எம்.பி.,யாகும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

காலியான 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் பிப்.7 ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 பேர் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
இதில் அ.தி.மு.க, 4 இடங்களிலும், ஒன்றை கூட்டணி கட்சியான மார்க்., கம்யூ., கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்ட்டுள்ளது.


இதன்படி அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ., வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: முத்துக்கருப்பன் ( நெல்லை மாநகர் அ.தி.மு,க., செயலர் ), விஜிலா சந்தியானந்த் ( நெல்லை மேயர், மற்றும் மாநகர் மகளிர் அணி செயலர்), சசிகலா புஷ்பா ( தூத்துக்குடி மேயர், மகளிர் அணி செயலர்), சின்னத்துரை ( அ.தி.மு.க,. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ) .

Comments