கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா தோல்வி

வெலிங்டன் : நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 3வது ஒருநாள் போட்டியை போராடி டை செய்தது. இன்று வெலிங்டனில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியை 87 ரன்கள் வித்தியாசத்திலும், ஒருநாள் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

Comments