சுய விளம்பரம் தேடும் கெஜ்ரிவால்: வாசன்

சென்னை: சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியது, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாரத்தில் ஒரு நாள், நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களை பள்ளி குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம். இதற்காக துறைமுகம் ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குப்படுவதை தடுப்பது குறித்தும் இது போன்று மீண்டும் நடக்காமலிருக்கவும், வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தை துவங்கும். டில்லியில் கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் சுய விளம்பரத்திற்காக நடக்கிறது என்றார்.

Comments