திமுகவில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கம்!

திமுகவில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கம்!சென்னை: திமுகவில் இருந்து மு.க. அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில், இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திமுக தென் மண்டல பொறுப்பாளராக உள்ள அழகிரிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வரும் நிலையில், தேமுதிகவுடன் கூட்டணிக்கு திமுக முயன்று வருகிறது. ஆனால், அதைக் கெடுக்கும் வகையில் விஜய்காந்தைத் தாக்கி அழகிரி பேட்டி தந்தார். இதையடுத்து அழகிரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார் கருணாநிதி. இந் நிலையில் அவரை கட்சியை விட்டே நீக்கியுள்ளது திமுக. அழகிரி தாற்காலிகமாக கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

Comments