மதுரை பிரவீனுக்கு சவுரிய சக்ரா விருது

புதுடில்லி: பாதுகாப்பு படையினருக்கான, வீரதீர செயல்களுக்கான விருது, 368 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் விமானப்படை பைலட் ஆபீசர் பிரவீன். இவர், கடந்த ஜூன் மாதம், உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பேய் மழை, நிலச்சரிவில், சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் இறந்தார். இவர் உள்ளிட்ட, 10 பேருக்கு, சவுரிய சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து பிரவீன் தாயார் மஞ்சுளா கூறுகையில், ''மற்றவர்களுடைய உயிர் காக்கும் பணியில், ஈடுபட்டிருந்த பிரவீன் விபத்தில் இறந்தார். அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு விருது வழங்கியுள்ளது'' என்றார். கூர்க்கா ரைபிள் படை பிரிவை சேர்ந்த, பூபால் சிங், இந்திய விமானப்படை அதிகாரி, டேரிகேஸ் டெலினோ, மத்திய ரிசர்வ் படை வீரர், பிரிகுநந்தன் சவுத்ரி (இறப்புக்கு பின்) ஆகியோருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments