பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே- சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்

இந்தியாவில் சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பாலிவுட் நட்சத்திரங்களும், திரை உலக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் தனுஷ் சிறந்த அறிமுக நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

59வது பிலிம்பேர் விருது
 
பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிம்பேர் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டன.

தீபிகா படுகோனே
 
முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பர்கான் அக்தர்
 
இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபேல் சிறந்த படமாக பாக் மில்கா பாக் படம் தேர்வு பெற்றுள்ளது.

தனுஷ் அறிமுக நடிகர்
 
ராஞ்சனா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சூட் கோட்டில் தனுஷ்
 
தமிழ்நாட்டில் நடைபெறும் விருது விழாக்களில் வேஷ்டி, சட்டை வரும் தனுஷ், பிலிம்பேர் விழாவில் கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்து அசத்தினார்.

வாணி கபூர்
 
அதேபோல ஷுத்த தேசி ரொமான்ஸ் படத்தில் அறிமுகமான வாணி கபூர் சிறந்த அறிமுக நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Comments