ஆஸ்திரேலியா
2வது வார இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஜில்லா படம் ரூ.23.12 லட்சம்
வசூலித்துள்ளது. ஆனால் வீரம் ஜில்லாவை விட அதிகமாக ரூ. 44.94 லட்சம் வசூல்
செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ்
தெரிவித்துள்ளார்.
மலேசியா
மலேசியாவில் படம் ரிலீஸான 10 நாட்களில் ஜில்லா ரூ.1.54 கோடி
வசூலித்துள்ளது. வீரம் ஜில்லாவை விட சற்று குறைவாக ரூ.1.46 கோடி வசூல்
செய்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ்
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த வீரம்
இரண்டாவது வாரத்தில்(16 முதல் 19ம் தேதி வரை) 4வது இடத்திற்கு வந்தது.
கடந்த வாரம் 2வது இடத்தில் இருந்த ஜில்லா இரண்டாவது வாரத்தில் 5வது
இடத்திற்கு சென்றுவிட்டது.
அமெரிக்கா
வீரமும் சரி, ஜில்லாவும் சரி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
ரசிகர்கள்
ஜில்லாவும், வீரமும் இப்படி வசூலை அள்ளுவதற்கு காரணம் அஜீத் மற்றும் விஜய்
ரசிகர்கள் தான். தங்களின் பிரிய நடிகர்களின் படத்தை தியேட்டரில் பார்த்து
படத்தை ஹிட்டாக்கியுள்ளனர்.
Comments