புதுடில்லி: பிரிட்டனில் குடியுரிமை பெறுவதற்காக, இந்தியர்கள் பலர்,
போலியான திருமணங்கள் செய்வது அதிகரித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர்,
பிரிட்டனில் குடியேறும் பொருட்டு, பல்வேறு முரண்பட்ட வழிகளை கையாண்டு
வருகின்றனர்.
சுற்றுலா விசா மூலம் சென்று வேலை பார்ப்பதாக கூறி, அங்கேயே முறைகேடாக தங்கி விடுவது;
அங்குள்ள பெண்களை திருமணம் செய்து
கொள்வதன் மூலம் குடியேற்ற உரிமை கிடைக்கும் என்பதால், போலி திருமணம் செய்து
கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.இந்த தில்லுமுல்லுகளை எல்லாம்
அறிந்த பிரிட்டன் குடியேற்றத் துறை அதிகாரிகள், தொடர்ந்து சோதனை நடத்தி,
பலரை கைது செய்து வருகின்றனர். இன்னும் சிலரை அங்கிருந்து
வெளியேற்றியுள்ளனர்.பிரிட்டனை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதன்
மூலம், 5 ஆண்டுகளில், அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும் என்ற ஆசையால்,
இந்தியர்கள் பலர், போலியான திருமணங்களை செய்து வருவதாக, அந்நாட்டு
குடியேற்றத் துறை அதிகாரி, ஜான் வைன் தெரிவித்துள்ளார். சுற்றுலா விசா மூலம் சென்று வேலை பார்ப்பதாக கூறி, அங்கேயே முறைகேடாக தங்கி விடுவது;
அவர் மேலும் குறிப்பிடுகையில், ""இந்தியர்களை போல, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும், அதிக அளவில் போலி திருமணங்கள் செய்கின்றனர். இதை தடுப்பதற்காக, திருமண பதிவு அலுவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.
Comments