பாட்னா: பெண்களுக்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள, "நிர்பீக்'
கைத்துப்பாக்கியை வாங்க, பீகார் மாநில பெண்கள், வெகு ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், 23 வயது மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்ததை அடுத்து, அந்தப் பெண்ணின் புதுப் பெயரான, "நிர்பயா'வை நினைவுபடுத்தும் விதத்தில், நிர்பீக் என்ற பெயரில், கைத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தின், கான்பூர் நகரில் உள்ள, ராணுவ
ஆயுத தொழிற்சாலை, இந்த, 500 கிராம் எடையுள்ள, டைட்டானியம் உலோகத்தால் ஆன,
கைத்துப்பாக்கியை தயாரித்துள்ளது; இதன் விலை, 1.22 லட்ச ரூபாய். பெண்கள்
எளிதாக கையாளவும், உடையில் மறைத்து வைத்துக் கொள்ளும் வகையிலும், இந்த
துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், 23 வயது மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்ததை அடுத்து, அந்தப் பெண்ணின் புதுப் பெயரான, "நிர்பயா'வை நினைவுபடுத்தும் விதத்தில், நிர்பீக் என்ற பெயரில், கைத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதை வாங்க, பீகார் மாநில பெண்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். துப்பாக்கி விற்பனைக்கான அறிவிப்பு வெளியாகி, ஒரு மாதமே ஆன நிலையில், 400 பெண்கள், இந்த துப்பாக்கியை வாங்க விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர்.
Comments