இதுதொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க.,வின் தலைவராக, விஜயகாந்த் இருந்தாலும், அரசியல் ரீதியாக,
தலைமை ஏற்க... : இதற்கு பதில் அளிப்பதற்காக, தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்கள் பலரிடமும், ஆலோசனை கேட்டு வருகிறார், பிரேமலதா. இந்த ஆலோசகர் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர், டில்லியில், ஜனாதிபதிகளுக்கு ஆலோசகர்களாக இருந்தவர். டில்லியில் இருக்கும் அவரை, சென்னைக்கு இதற்கென வரவழைத்து, யோசனை கேட்டு உள்ளார், பிரேமலதா. இந்த ஆலோசனையின் போது, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் தி.மு.க., கட்சிகள் எங்களை அணுகியுள்ளன. 40 தொகுதிகளில், சரிபாதி தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட விரும்புகிறது. கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை நாங்களே, பிரித்துக் கொடுக்க விரும்புகிறோம். அத்துடன், கூட்டணிக்கும் தலைமை ஏற்க, விஜயகாந்த் விரும்புகிறார் என்ற, விவரங்களை, ஆலோசகரிடம் தெரிவித்து உள்ளார், பிரேமலதா.
ஆனாலும், கூட்டணிக்கு தலைமை என்ற, எங்களின் நிபந்தனையை, காங்கிரஸ், தி.மு.க., ஏற்க தயாராக இல்லை. பா.ஜ., தரப்பு மட்டும், அதற்கு சம்மதித்து பேச்சு நடத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இரு அணுகுமுறை : இதையெல்லாம், பொறுமையாகக் கேட்ட அந்த ஆலோசகர், தே.மு. தி.க.,வுக்கு, மூன்று கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனாலும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்ற, இரு அணுகுமுறைகளைப் பின்பற்றுவதே, கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக இருக்கும். தனித்துப் போட்டியிட்டால், பல தொகுதிகளில், டிபாசிட் போகலாம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், அந்தப் பிரச்னை வராது. வரும் லோக்சபா தேர்தலில், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதனால், எதிர்காலத்தில், தமிழகத்தில், ஆட்சியை பிடிக்க விரும்பும், தே.மு.தி.க., - பா.ஜ.,வுடன் அணி சேர்வதே சரியாக இருக்கும் என, தெரிவித்து உள்ளார்.
ஒரே மாதிரியாக : நாட்டு நலன் தொடர்பான விஷயங்களில், விஜயகாந்தின் எண்ணமும், பா.ஜ.,வின் அணுகுமுறையும், ஒரே மாதிரியாக இருப்ப தால், இரு கட்சிகளின் தொண்டர்களும், தேர்தலில், ஒன்றிணைவதே, சரியாக இருக்கும். மோடியின் பிரசாரமும், நிச்சயம் கூட்டணி வெற்றிக்கு உதவும். எனவே, நிபந்தனைகள் எதுவும் இன்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேருங்கள் என்றும், அந்த ஆலோசகர் மேலும் கூறியுள்ளார். அதனால், கூட்டணி விவகாரத்தில், பிரேமலதா தெரிவிக்கும் யோசனை அடிப்படையில், விஜயகாந்த் விரைவில், முடிவெடுக்கலாம் என, நம்பப்படுகிறது.
Comments