சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்

புதுடில்லி: மத்திய இணையமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டில்லியிலுள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூர், 57, பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் மெகர் தரர் என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, அவர் மனைவி, சுனந்தா புஷ்கர், 'ட்விட்டர்' இணையதளத்தில், புகார் தெரிவித்திருந்தார்.
இதை மறுத்த சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹாக்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டில்லியில் உள்ள லீலா ஓட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments