புதுடில்லி: டில்லி விஞ்ஞான்பவனில் நடந்து வரும் வெளிநாடு வாழ்
இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்ற பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி
பேசுகையில்:
இந்தியா முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. வரும் 2014 லோக்சபா
தேர்தலுக்கு பின்னர் மத்தயில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் உறுதியான
சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நேற்று கூட இந்தியா முன்னோக்கி செல்கிறது
என்று கூறினார்.
இதனை நான் மறுக்கவில்லை. இந்தியா நல்லநிலையை நோக்கித்தான்
சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இன்னும் 4 முதல் 6 மாதங்கள் ( தேர்தல
முடியும் ) வரை காத்திருக்கின்றோம். அப்போது நல்ல முடிவு வரும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநில அரசுகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனர்.
மத்திய , மாநில அரசுகள் இடையே குறுகிய மனப்பான்மை கொண்ட போக்கு நிலவியதால்
முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் செயலாற்றுவதற்கு நாம் மத்திய
அரசை நம்பித்தான் இருக்க வேண்டியுள்ளது. ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்
விதமாக குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்படவுள்ளது. இத
வேண்டிய ஆதரவை நீங்கள் அளிக்க வேண்டும். நீங்கள் பல்வேறு அனுபவங்களை
பெற்றுள்ளீர்கள்.
இந்திய சகோதர, சகோதரிகள் : வரும்
2022 ல் நாம் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழா (அம்ருத்தவர்சா
மகா உத்சவ் ) கொண்டாடவுள்ளோம். இந்தியாவின் ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் துணையாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் கரம்
சேர்க்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் டாலராகவோ, பவுண்டாக கொண்டு
வருவதை அளவீடாக எடுக்க கூடாது. அவர்கள் கொண்டு வரும் அறிவு களத்தைத்தான்
நாம் பார்க்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து
நாம் பேசும்போது அவர்கள் எத்தனை டாலர் , எத்தனை பவுண்ட்
சம்பாதித்திருப்பார்கள் என்று தான் நினைக்கிறோம். நமது இந்திய சகோதர,
சகோதரிகளை டாலர் , பவுண்ட் கொண்டு எடை போட வேண்டாம். அவர்கள் வேறுபட்ட பணி
கலாச்சாரத்தில் பணியாற்றுகின்றனர். இவர்கள் உலகளாவிய அனுபவம், அறிவுத்திறன்
பெறுகின்றனர்.
அவர்களின் அறிவை நமது இந்தியாவுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் பார்க்க வேண்டும். ஜனநாயகமும், நமது மக்கள் பலமுமே இந்தியாவின் பலமாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
Comments