புதுடில்லி: ''சுனந்தாவின் உடலில் உள்ள காயங்களுக்கு, சசிதரூர் காரணமாக
இருக்கலாம் என்பதை, எந்த வகையிலும் நம்ப முடியாது. சுனந்தாவின் மரணத்துக்கு
சசி தரூர் காரணமில்லை,'' என, சுனந்தாவின் சகோதரர், ராஜேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூரின் மூன்றாவது மனைவி, சுனந்தா புஷ்கர்.
சமீபத்தில் டில்லியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில்,
மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தாவின் சகோதரரும், ராணுவ
அதிகாரியுமான, கர்னல் ராஜேஷ், இதுகுறித்து கூறியுள்ளதாவது: சுனந்தா - தரூர்
தம்பதி, சந்தோஷமாக வாழ்ந்ததை, நான் அருகில் இருந்து பார்த்தவன். சுனந்தாவை
தரூர், மிகவும் நேசித்தார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு
ஏற்படுவது, சாதாரண விஷயம். இது அனைவர் வாழ்வில் ஏற்படுவது சகஜமே. தரூர்,
சுனந்தாவை அடித்து துன்புறுத்தியிருப்பார் என்பதில், எனக்கு
நம்பிக்கையில்லை. சுனந்தா மரணத்துக்கு, சசி தரூர், காரணமில்லை. சுனந்தாவின்
மரணம் குறித்த சர்ச்சைகளுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூரின் மூன்றாவது மனைவி, சுனந்தா புஷ்கர்.
Comments