மோடி பற்றி கேட்ட நிருபரை அடித்த சாமியார்

புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி குறித்து, திரும்பத்திரும்ப கேள்விகள் கேட்ட, பத்திரிகை நிருபரை, துவாரகா பீடத் தலைவர், சுவாமி சொரூபானந்தா, கன்னத்தில் அறைந்தார்.

நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி.
காங்கிரஸ் மற்றும் அக்கட்சி?த் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ள அவர், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியை, அவ்வப்போது கண்டித்து வருவது வழக்கம். பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தின், ஜபல்பூருக்கு, சமீபத்தில் வந்திருந்த அவரிடம், நேற்று முன்தினம், உள்ளூர் பத்திரிகை ஒன்றின் நிருபர், மோடி குறித்து, கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதிலளிக்க, சாமியார் விரும்பவில்லை. எனினும், விடாது, திரும்பத்திரும்ப, மோடி குறித்து கேள்வி கேட்ட நிருபர் மீது கோபம் கொண்ட சாமியார், அவரை கன்னத்தில் அடித்து, "தூரப் போ' என, விரட்டியடித்தார்.

இது குறித்து, சொரூபானந்த சுவாமி கூறுகையில், ""மோடி பற்றி, திரும்பத்திரும்ப கேள்வி கேட்டதால், கோபத்தில் நான் அடித்து விட்டேன்,'' என்றார். அமைதியின் உருவமாக செயல்பட வேண்டிய சாமியார், கோபத்தில், நிருபரை தாக்கிய காட்சிகள், அங்குள்ள, "டிவி'களில் வெளி யாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments