மதுரை:
மதுரையில், "வேட்டி தினம்' ஜனவரி, 13ம் தேதி, கடைபிடிக்கப் படுகிறது.
இதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில், பல ரக வேட்டிகள் விற்பனை துவங்கியது.
இதில், அ.தி.மு.க., கரை வேட்டிகள் தவிர, வேறு கட்சிகளின் "கரை' வேட்டிகள்
இடம்பெறவில்லை. மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மனமகிழ்
மன்றத்தில் நடந்த விற்பனை கண்காட்சியில், ஆட்சியர் சுப்பிரமணியன், கோ -
ஆப்டெக்ஸ் துணை பொது மேலாளர் செங்கல்வராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இளைஞர்களுக்கான, இளவட்டம் வேட்டி, இளவட்டம் பருத்தி வேட்டி, கைத்தறி
பட்டுவேட்டி, மாப்பிள்ளை வேட்டி, கரைபடாத வேட்டி, வாசனை வேட்டி, ஜமீன்
வேட்டி, காந்தி(பரமாஸ்) வேட்டி, நாட்டாமை வேட்டி, சாமி வேட்டி, நாதசுரம்
வேட்டி என, 175 - 1340 ரூபாய் விலையில், பல ரகங்களில் வேட்டிகள்
விற்பனைக்கு உள்ளன. அத்துடன், அ.தி.மு.க., கட்சி "கரை' வேட்டியும்
இடம்பெற்றுள்ளது. பிற கட்சிகளின், "கரை' வேட்டிகள் எதுவும் விற்பனைக்கு
வைக்கப்படவில்லை. கைத்தறி துணிக்கு, 30 சதவீதம், விசைத்தறி துணிகளுக்கு, 20
சதவீதம் தள்ளுபடி உண்டு.அதிகாரிகள் கூறுகையில், "பொங்கலையொட்டி, மாவட்டத்தில், 3 கோடி ரூபாய்க்கு, கைத்தறி துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். வேட்டி தினத்தையொட்டி, இதுவரை, 4,000 வேட்டிகள் விற்பனையாகி உள்ளது. 6,000 வேட்டிகள், இன்னும் ஓரிருநாளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.
Comments