யுரி: நாடு முழுவதும் இன்று நடந்து குடியரசு தின விழா மகிழ்வோடு நடந்து
கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் தனது
வாலாட்டத்தை காட்டியது. பதிலுக்கு இந்திய துருப்புக்கள் சுட்டதாகவும், இந்த
தாக்குதலில் யாரும் அதிர்ஷ்டவசமாக காயம் அடையவில்லை என்றும் ராணுவ
வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இது குறித்து ஜி.ஓ.சி., ராணுவ டிவிஷன் மேஜர் ஜெனரல் அனில் சவுகான்
கூறுகையில்:
அவர்கள் யுரி செக்ஷன் காமன் போஸ்ட் மீது 3 ரவுண்ட்டுகள்
சுட்டனர். சில சிறிய ரக ஆயுதங்களும் வீசப்பட்டன. இது எல்லை மீறல் ஆகும்.
பாகிஸ்தானின் அத்துமீறல் அமைதி பேச்சு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றார்.
இந்த துப்பாக்கிச்சண்டை 3 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.
Comments