சென்னை : நாட்டின் தலை எழுத்தை மாற்றும், திறனுடைய பெண்களுக்கு பொறுமை
கிடையாது, என, பொங்கல் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்
பேசினார்.வடசென்னை, தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு
ஏற்பாட்டில்,தண்டையார் பேட்டையில், பெண்களுக்கு, பொங்கல் பரிசுப்பொருள்,
கம்ப்யூட்டர் மற்றும் தையல் இயந்திரம் உட்பட, பொங்கல் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா, நடந்தது.
விழாவில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின்
பேசியதாவது:நாட்டின் தலை எழுத்தையே, மாற்றும் திறனுடைய பெண்களுக்கு பொறுமை
கிடையாது. நான் இதை சொல்வதற்காக, பெண்கள் கோபிக்கக் கூடாது. பெண்களுக்கு
வீட்டை பற்றிய சிந்தனை மட்டுமே உள்ளது. நாடு நன்றாக இருந்தால் தான், வீடு
நன்றாக இருக்கும் என்பதை, அவர்கள் சிந்திக்க வேண்டும்.கடையில் வாங்கும்
கருவாட்டிலிருந்து வருவது, நல்ல நாற்றமா, கெட்ட நாற்றமா என, பார்க்கும்
பெண்கள், நாட்டை பற்றியும் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.இவ்வாறு
ஸ்டாலின் பேசினார்.
Comments