இந்தியா
அணு ஆயுத பாதுகாப்பில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை விட பின் தங்கி
உள்ளது என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி பொருட்கள் பாதுகாப்பு குறித்து, 25 நாடுகளில், அமெரிக்க நிறுவனம் ஆய்வு நடத்தியது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், இந்தியா 41 புள்ளிகளைப் பெற்று 23வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து அணு ஆயுத ஆபத்து ஒழிப்பு மைய அறிக்கையில் கூறுகையில், அணு
ஆயுதப் பாதுகாப்பு நிதியை இந்தியா அதிகரித்துள்ளது, ஆனால், அணு ஆயுதங்கள்
மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பாதுகாப்பில், தளர்வான அணுகுமுறை
காணப்படுகிறது.
இந்தப் பட்டியலில் சீனா, 62 புள்ளிகளைப் பெற்று 20வது இடத்திலும், 46
புள்ளிகளைப் பெற்று பாகிஸ்தான் 22வது இடத்திலும் உள்ளன. அணு ஆயுத
பாதுகாப்பு தொடர்பான பலவீனமான சட்டம், சுதந்திரமான நிறுவனம் இல்லாமை போன்ற
காரணங்களால் இந்தியா இந்த விடயத்தில் பின்னடைந்துள்ளது என்று
தெரிவித்துள்ளனர்.
Comments