புதுடில்லி: நாடு முழுவதும் இன்று குடியரசுதினம் கோலாகலமாக
கொண்டாடப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
கொடியேற்றினார். முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங் அமர்ஜவான் ஜோதியில் மறைந்த
ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு புடை சூழ குதிரைப்படை
வீரர்கள் ஜனாதிபதியை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசைய்யா தேசிய கொடியேற்றி வைத்தார்.
முதல்வர் ஜெ., வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி
கவுரவித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி
நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. டில்லியில் 50 ஆயிரம் போலீசாரும், 35 ஆயிரம்
ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ ஆபே, காங்., தலைவர்
சோனியா, மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சரியாக 10 மணிக்கு ராஜ்பாத்தில் ஜனாதிபதி கொடியேற்றிய பின்னர் தொடர்ந்து வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர் விருதுகள் , பதக்கம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.
Comments