லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்: அத்வானி உறுதி

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தற்போது, லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். அவர் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அத்வானியை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய பா.ஜ., மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். ராஜ்யசபா தேர்வு செய்யப்படுவது குறித்து வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்க ஏதும் இல்லை. அது குறித்து யாரும் கூறினால் அது குறித்து பரிசீலனை செய்வேன். வரும் லோக்சபா தேர்தலுக்கு பின் மத்தியில் நிச்சயம் முழு பலத்துடன் நிலையான அரசு அமையும். தற்போது நாட்டின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் சிறந்த நிர்வாகமாக இருக்கும் என கூறினார்.

Comments