மாநில அரசின் கையில் போலீஸ் துறை இருக்க வேண்டும்; கடமை தவறிய போலீசார்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின்
ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமது
அமைச்சர்களுடன் டில்லியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சட்டம்
ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும், டில்லியைப்
பொறுத்தவரை, போலீசின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் உள்ளது.
சட்ட ஒழுங்கை
பராமரிக்க வேண்டிய போலீஸ், மாநில அரசின் கட்டுப்பாட்டில இல்லாத நிலையில்,
மாநிலத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழி்ப்பு சம்பவங்களுக்கு யார்
பொறுப்பு? டில்லியில் இந்த நிலை நீண்ட காலமாக இருக்கிறதென்றாலும், இதுவரை
டில்லியிலும் காங்கிரஸ் அரசே இருந்ததால், பிரச்னை பெரிதாகவில்லை. தற்போது
ஆட்சி மாறி இருப்பதால், தன் மீது பழி வந்து விடக்கூடாது என்பதில்
கெஜ்ரிவால் எச்சரிக்கையாக இருக்கிறார். அதன் விளைவுதான இந்த தர்ணா
போராட்டம்.
கடிதம் எழுதினால் போதுமா:
தன் மீது பழி வந்து விடக்கூடாது என்று ஒரு முதல்வர் முன் எச்சரிக்கையாக
இருப்பது சரிதான்? அதற்காக தெருவில் இறங்கி போராடுவதா? என்று சிலர் கேள்வி
எழுப்பக் கூடும். உண்மைதான். ஆனால் மத்திய அரசின் போக்கைக் கவனித்தால்
இதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது. உதாரணமாக, தமிழக மீனவர்
பிரச்னை, மின்சார பிரச்னை, காவிரி பிரச்னை போன்றவற்றில் நமது முதல்வர், 10 ,
15 கடிதங்கள் எழுதியும், சட்டசபையில் தீர்மானம் இயற்றியும், டில்லியில்
பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்தும், நாம் எதிர்பார்த்த பலன்
கிடைக்கவில்லையே. மத்திய அரசு சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கும்போது,
வழக்கமான முறைகளில் கோரிக்கை வைப்பது கேலிக்கூத்தாகி விடுகிறதே.
மத்திய அரசின் பிடிவாதம்:
மக்களுக்கு தரப்படு்ம் மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை
ஒன்பதிலிருந்து 12 ஆக உயர்த்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை
விடுத்தபோதெல்லாம், " அது சர்வதேச விலை நிர்ணயம் சம்பந்தப்பட்டது; நாமாக
இதில் முடிவெடுக்க முடியாது; மான்யம் இல்லாத சிலிண்டர் எண்ணிக்கையை
அதிகரிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை"யென்று, நிதி அமைச்சரும் பெட்ரோலியத்
துறை அமைச்சரும் எப்படி எல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் காங்கிரஸ்
துணைத் தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே 12
சிலிண்டர்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியானதே. எப்படி? இப்படி முடியக் கூடிய
செயலைக் கூட, செய்யக்கூடாது என்று மத்திய அரசு அடம் பிடிக்கும்போது,
கெஜ்ரிவால் தற்போது எடுத்துள்ள தர்ணா போராட்டம் என்ற ஆயுதம் சரிதானே என்றே
எணணத் தொன்றுகிறது.
எது எப்படியானாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாசகர்களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Comments