காசியாபாத்: காஷ்மீரை பிரிவினைவாதத்திற்கு ஆதரவு தரும் வகையில் கருத்து
வெளியிட்ட பிரசாந்த் பூசனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி
கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மியின் மூத்த நிர்வாகி பிரசாந்த்
பூஷன் காஷ்மீர் தன்னாட்சி மற்றும் அங்குள்ள ராணுவ வெளியேற்றம் குறித்து
கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து கடும் விமர்சனத்திற்குள்ளானது.
நாட்டை பிரிவினைபடுத்தும் விதமாகவும், தேச துரோகமாக இருப்பதாகவும் பா.ஜ.,
உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன. ஆனால் இது ஆம் ஆத்மியின் கருத்து அல்ல.
பூனுனின் தனிப்பட்ட கருத்து என்று கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்
கூறினார்.
இந்நிலையில் உ .பி மாநிலம் காசியாபாத்தில் கவுசாம்பியில் உள்ள ஆம் ஆத்மி
அலுவலகத்திற்கு வந்த 40 பேர் தாக்குதல் நடத்தினர். இந்து ரக்ஷா தல்
அமைப்பினர் கையில் செங்கொடியுடன் வந்தனர். ஆம் ஆத்மிக்கு எதிரான கோஷங்கள்
போட்டனர். தொடர்ந்து கம்பு , கல் ஆகியன கொண்டு தாக்குதல் நடத்தினர்.
அலுவலகத்தில் யாரும் இல்லாததால் கட்சி பிரமுகர்கள் யாருக்கும் சேதம் இல்லை.
பூஷனுக்கு இது புதிதல்ல : பிரசாந்த பூஷன் இது போன்ற காஷ்மீர்
குறித்து சர்ச்சையான கருத்தை கடந்த 2011 அக்டோபரில் கூறினார். இதனால் அவரது
வக்கீல் அலுவலகத்தில் இருந்தபோது சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தினர்
என்பது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் கண்டனம்:
இந்த சம்பவத்திற்கு டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான
அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதலால்
காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டு விடுமா ? நாங்கள் எங்களின் நிலையை
ஏற்கனவே அறிவித்து விட்டோம்.
பிரசாந்த் பூஷன் இது குறித்து இன்று பேசுகையில்: இது போன்று இந்த அமைப்பு
கடந்த காலத்திலும் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பா.ஜ., மற்றும் இந்து
அமைப்பின் இந்த ஆவேச போக்கை நாடு முழுவதும் கொண்டு செல்வேன். என்றார்.
Comments