காங்கிரஸ் ஆதரவு குறித்து கருணாநிதி முடிவு செய்வார்: திருச்சி சிவா

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோருவது பற்றி கருணாநிதி முடிவு செய்வார் என ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் திருச்சி சிவா கூறினார். ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க., வேட்டாளராக திருச்சி சிவா நேற்று அறிவிக்கப்பட்டார். இன்று அவர் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியிடம் வாழ்த்து பெற வந்ததாகவும், 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.மேலும் அவர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோருவது பற்றி கருணாநிதி முடிவு செய்வார் எனவும் கூறினார்.

Comments