சீக்கிய கலவரத்தில் எனக்கு தொடர்பு இல்லை; வருத்தம் தெரிவிக்க தேவையுமில்லை: ராகுல்

புதுடில்லி: 1984ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்போது நான் காங்கிரசில் தீவிரமாக இருக்கவும் இல்லை; எனவே அதற்காக நான வருத்தம் தெரிவிக்க தேவையில்லை, என காங்., துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு:

* எம்.பி., யாகி 10 ஆண்டுக்குப் பிறகு கொடுக்கும் முறையான பேட்டி இது; முதல் பேட்டி அல்ல



* பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை.

* மோடியை பார்த்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.

* என் பாட்டி, தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும் கலங்காமல் இருந்தவன் நான்.

* பா.ஜ.,வை வீழ்த்தி, மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அந்த குறிக்கோள்.

* 1984 கலவரத்துக்கும் 2002 கலவரத்துக்கும் வேறுபாடு உண்டு

* 1984 சீக்கிய கலவரத்தில் சில காங்கிரசாருக்கும் தொடர்பு உண்டு

* 1977ல் என் பாட்டி ( இந்திரா) தோற்றபோது, அவருக்கு துணையாக நின்றவர்கள் சீக்கியர்களே

* சீக்கியருக்கு எதிரான கலவரத்தைத் தடுக்க காங்கிரஸ் அரசு முயன்றது

* அந்த கலவரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.

* கலவரத்தின்போது நான் காங்கிரசிலும் தீவிரமாக இல்லை.

* அந்த கலவரத்துக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை

* 2002 கலவரத்தை குஜராத அரசே தூண்டிவிட்டது

* கலவரத்தை நான் நேரில் பார்க்கவில்லை; அங்குள்ள மக்கள் கூறி கேட்டிருக்கிறேன்.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் வர வேண்டும்.

* டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தது தேவையற்ற ஒன்று அல்ல.

* ஆட்சிமுறை என்பது எவ்வளவு கடினமானது என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.

* 2014 லோக்சபா தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெறாவிட்டால் நானே பொறுப்பேற்கிறேன்.

* வாரிசு அரசியல் தி.முக., உட்பட அனைத்து கட்சிகளிலும் இருக்கிறது.

* 40 ஆண்டுகளாக சுப்ரமணிய சுவாமி எனது குடும்பத்தை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

* பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டும் அரசியலுக்கு வரவில்லை.

* காங்.,கில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* எங்களுடைய அமைச்சரையே தண்டித்திருக்கிறோம்.

* தி.மு.க., ( ராஜா) அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்தோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

Comments