பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே,தனது மனைவியும்
பத்திரிகையாளரான வாலெரி ட்ரையர்வெய்லரை பிரிவதாக நேற்று
அறிவித்துள்ளார். ஹாலண்டேக்கு வயது 59. மனைவி வாலரிக்கு வயது
48.ஆகிறது.ஹாலண்டே ஏற்கனவே திருமணமாகி செகோலின் என்பவரை மணந்து பின்னர்
விவகாரத்து பெற்றிருந்தார்.அவர்களுக்கு 4 குழந்தைகள் இருந்தது.
தற்போது
அதிபர் ஹாலண்டேயுடன் வாழ்ந்து வரும் காதலியும் 2 தடவை விவாகரத்து ஆனவர்.
இவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டு நடிகையும், சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான ஜூலி காயட்(41) ஹாலண்டேவுக்கு தொடர்பு என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ட்ரையர்வெய்லர் 8 நாட்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் இது குறித்து அவர் பேட்டியில் கூறும்போது, இது என் தனிப்பட்ட விசயம் .ஏன் ஊடகங்கள் இவ்வளவு ஆர்வம் காட்டகிறது என கூறியிருந்தார்.இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த அதிபர் ஹாலண்டே, மனைவி வாலெரி ட்ரையர்வெய்லரை விட்டு பிரிவதாக நேற்று அறிவித்தார்.பொருளாதார திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஹாலண்டேயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments