சென்னை : வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்ளிட்ட 15 பேரின் தூக்கு தண்டனையை
ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு
திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின்
அளித்த பேட்டியில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்ப்பை வரவேற்கிறேன்;
பிப்ரவரி 07ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் திருச்சி
சிவாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது குறித்து கட்சி தலைவர் கருணாநிதி
ஆலோசனை நடத்தி வருகிறார்;
வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் முடிவு செய்து
விரைவில் முடிவை அறிவிப்பார்; திமுக.,விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக
உள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments