ரூ.33,000 வரை உயரும்
தங்கத்தின் அடிப்படை விலை ஒரு அவுன்சுக்கு 1375 அமெரிக்க டாலர்களாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள் நாட்டுச் சந்தையில், தங்கத்தின்
விலை நிலை 10 கிராமிற்கு 25000 முதல் 33000 ஆயிரம் வரையும் அடிப்படை விலை
சராசரியாக ரூபாய் 28000 வரையும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கம் சரி, வெள்ளி??
தங்கத்தின் விலை உயரும் போது வெள்ளி மட்டும் என்ன விதி விலக்கா. வெள்ளியின்
அடிப்படை விலை சராசரியாக ஒரு கிலோவிற்கு 2500 அமெரிக்க டாலர்களாக
இருக்கும் எனவும், உள்நாட்டு சந்தையில் அதன் சராசரி விலை கிலோவிற்கு 45000
ரூபாய் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளி 55,000 வரை உயரும்
வெள்ளியின் வர்த்தக விலை நிலைகள் ரூபாய் 37,000-லிருந்து 55,000 வரை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரித்தி சித்தி புல்லியன்ஸ் லிமிடெட்
கோத்தாரி குழுமமான RSBL நிறுவனம் விலை உயர்ந்த உலோகங்கள், சிறப்பு உலோக
பார்கள், மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களில்
செய்யப்பட்ட நாணயம் ஆகிய வர்த்தக செயல்பாடுகளில ஈடுபட்டுள்ளது.
12 வருட உயர்வு...
பன்னிரண்டு வருட தொடர்ந்த விலை உயர்வை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்,
2013 ஆம் ஆண்டு 28 சதவிகித சரிவை சந்தித்தது. இது 1981 ஆண்டிலிருந்து
இதுவரை இல்லாத மிகக் கூர்மையான சரிவாகும்.
மத்திய அரசின் உள்ளிடு...
2012-13 ஆம் ஆண்டில் 88 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உச்சத்தை எட்டிய
நடப்புக்கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும்
ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு தங்க முதலீடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளால்
தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.
தங்கம்
இந்தியாவின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 50
பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குக் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் ஒரு அவுன்சுக்கு 1,910 அமெரிக்க
டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட 24 கேரட் தங்கம் அதன் பின் அப்போது தான்
சரிவடைந்துள்ளதாக கோத்தாரி குறிப்பிட்டார்.
Comments