புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் தென்
இந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, தமிழகத்தி்ல காங்கிரஸ் படுதோல்வியை
சந்தி்க்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தனியார்நிறுவனம் கருத்துகணிப்பு:
தனியார்தொலைகாட்சி நிறுவனம்நடத்திய கருத்துகணிப்பில் ஆந்திரா
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5முதல் 9 இடங்களையே பெறும்.
இதன்
வாக்குவங்கி32 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாககுறையும். ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி 11-19 இடங்களை கைப்பற்றும் எனவும், தெலுங்கு தேசம் 9-15 இடங்களை கைப்பற்றும் சமயத்தி்ல் பா.ஜ., உடனான புதிய கூட்டணி அமைப்பதால் ஒரளவிற்கு வெற்றி பெற முடியும் எனவும் இந்த தேர்தலில் பா.ஜ., தனது வாக்கு வங்கியை 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதகரித்து கொள்ளும் என கூறியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டீரியசமிதியை பொறுத்தவரையில் அதன் செல்வாக்கான தொகுதிகளில் 4-8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற இயலும்.
தமிழகத்தில் ஐந்திற்குள் மட்டுமே:
தமிழகத்தைபொறுத்த வரையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி
வரும் அதிமுகவிற்கு 15-23 இடஙகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும்,
தி.மு.க., 7-13 இடங்களுடன் இரண்டாம் இடம் பிடிக்க கூடும் எனவும்
காங்கிரஸ் 1-5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கேரளாவில் ஒரளவிற்கே வெற்றிபெறு பெறும் எனவும் கர்நாடக மாநிலத்தி்ல மட்டும் தன் செல்வாக்கை நிலை நிறுத்தும் என கூறியுள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 42 சதவீத வாக்குவங்கியுடன் 10-18 இடங்களை பெறும், இரண்டாமிடத்தில் 32 சதவீத வாக்கு வங்கிகளுடன் 6-10 இடங்களில் வெற்றிபெறும் எனவும் மூன்றாம் இடத்தி்ல தேவகவுடாவின் ஜனதாதளம் கட்சி 18 சதவீத வாக்குவங்கியுடன் 4-8 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவித்துள்ளது.
Comments