கூட்டணி ஆட்சி நிச்சயம்: இல்லையென்றால் அரசியலை விட்டு விலகுவேன்:தேவகவுடா

பெங்களூரு:காங்கிரசும், பா.ஜ.க.,வும் தனி மெஜாரிட்டியுடன் வென்றால் தான் அரசியலை விட்டே போய்விடுவதாக ஜனதாதளம்(எஸ்) தலைவர் தேவகவுடா நேற்று பெங்களூருவில் தெரிவித்தார்.பா.ஜ.க.,வை சேர்ந்த சிவானந்த நாயக், முன்னதாக எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். முன்னாள் மந்திரியான அவர் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி தேவகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் நேற்று சேர்ந்தார்.
பெங்களூர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் தேவேகவுடா இவ்வாறு தெரிவித்தார்.


கூட்டணி ஆட்சி நிச்சயம்:

வரும் பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவது நிச்சயம். என தேவகவுடா தெரிவித்துள்ளார்.வி.பி.சிங் ஆட்சி காலத்தில் தொடங்கிய கூட்டணி கலாசாரம் இந்த முறையும் தொடரும். இதில் சந்தேகமே வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரத்துக்காக எந்தவொரு தனிநபரையும் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது.காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அரசின் நிர்வாகத்தின் தோல்விகளை மக்கள் ஏற்கனவே பார்த்து விட்டார்கள். இனி அவ்வாறு எதுவும் நடந்து விடாது.காங்கிரஸ் கட்சியே அல்லது பா.ஜ.க., கட்சிகள் இவ்விரண்டில் எதுவானாலும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி பிடித்தால்நான் அரசியலைவிட்டே விலகி போவேன்.
மோடிக்கு எதிராக பேசமாட்டேன்:

சிலர் மோடிக்கு எதிராக பேசுகிறார்கள். ஆனால் நான் அவ்வாறு எல்லாம் பேசமாட்டேன்.அது சரியானது அல்ல. அரசியல் ரீதியாக பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானியிடம் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.அதேவேளையில் தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு . அவரை குறித்து யாராவது விமர்சித்தால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன் கண்டிப்பேன் என தேவகவுடா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Comments