டில்லி மாநில முதல்வராக பதவியில் இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவால், வீதியில்
இறங்கி, மத்திய அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்தியது, பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு,
இப்போது, கெஜ்ரிவால் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
சித்துதோஷ் முகர்ஜி தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம், 1992ல், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, இடைக்கால தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பை, மத்திய
அரசின், 'கெஜட்'டில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டது.பல முறை கோரிக்கை
வைத்தும், இடைக்கால தீர்ப்பை வெளியிடாமல், அப்போதைய பிரதமர், நரசிம்ம ராவ்
தலைமையிலான மத்திய அரசு, இழுத்தடித்தது.இதை கண்டித்து, 1993ல், அப்போதைய
தமிழக முதல்வர், ஜெயலலிதா, சென்னை மெரினா கடற்கரையில், உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தினார்.ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரே போராட்டத்தில்
ஈடுபட்டது, அப்போது, நாட்டிலேயே, முதல் முறை. எனவே, ஜெயலலிதா உண்ணாவிரதம்,
நாடு முழுவதும், பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உண்ணாவிரதம், பல
நாட்கள் நீடித்த நிலையில், மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி
வந்தது.அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், வி.சி.சுக்லா, உண்ணாவிரதப்
பந்தலுக்கு வந்து, இடைக்கால தீர்ப்பை, மத்திய அரசின் கெஜட்டில், வெளியிட
உறுதியளித்தார். பிறகு, அவரே, முதல்வருக்கு பழச்சாறு கொடுத்து,
உண்ணாவிரதத்தை முடித்தும் வைத்தார்.சித்துதோஷ் முகர்ஜி தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம், 1992ல், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, இடைக்கால தீர்ப்பு அளித்தது.
ஆயினும், இதுவரையில், வட மாநிலங்களில், எந்த ஒரு முதல்வரும், மத்திய அரசுக்கு எதிராக, உண்ணாவிரதமோ, தர்ணா போராட்டமோ, செய்ததாக தகவல் இல்லை.ஜெயலலிதாவுக்கு பிறகு, வட மாநிலங்களின், அரசியல் சரித்திரத்திலேயே, முதன் முறையாக, டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
Comments