வேப்பேரி: சமூக வலைதளங்களில், விஷமிகள் சிலர், தன் பெயரில், போலி கணக்கு
துவக்கி, அவதூறு பரப்புகின்றனர் என, நடிகர் பரோட்டா சூரி, போலீசில் புகார்
அளித்தார். வெண்ணிலா கபடிக்குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல
படங்களில் நடித்தவர், பரோட்டா சூரி. அவர், நேற்று போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் அளித்த புகார் மனு: தமிழ் சினிமாவில், முன்னணி நகைச்சுவை
நடிகராக உள்ளேன்.
சமூக வலைதளங்களில், விஷமிகள் சிலர், என் பெயரில், போலியாக
கணக்கு துவக்கி, நடிகர் ரஜினிகாந்த் பற்றி, நான் அவதூறாக பேசியதாக வதந்தி
பரப்பி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சமூக வலைதளங்களில்,
துவக்கப்பட்ட போலி கணக்குகளை முடக்க வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
Comments