கறுப்பு கொடியுடன் சீக்கியர்கள் ஆவேசம் ; காங்கிரஸ் ஆபீஸ் முற்றுகை ; பதட்டம்

புதுடில்லி: 1984 ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து காங்,. துணை தலைவர் ராகுல் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சீக்கியர்கள் பலர் இன்று கறுப்புக்கொடியுடன் காங்கிரஸ் ஆபீசை முற்றுகையிட்டனர். போலீசார் தடுத்தும் அடங்காத காரணத்தினால் எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.
இங்கு டயர் மற்றும் ராகுல் எதிர்ப்பு உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,1984 ல் நடந்த கலவரத்தில் காங்கிரசார் சிலர் பங்கெடுத்திருக்கலாம். இதற்கு நானா பொறுப்பு, இதில் எனக்கு தொடர்பு இல்லை என்றும், இந்த கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு முழு முயற்சி எடுத்தது. ஆனால் குஜராத்தில் கலவரம் தூண்டி விடப்பட்டது.

இந்த பேச்சுக்கு இன்று அகாலிதள கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்., குற்றவாளிகள் யார் ? காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். கலவரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும், ராகுல் காங்., கட்சி பதவியில் இருந்து விலக வேண்டும். என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

Comments