கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு

ஊட்டி: காங்கிரசுடனான கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் தி.மு.க., தலைவர் கருணாநிதி உறுதியாக இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார். கோத்தகிரி டர்னிங் சந்திப்பு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்தது. மத்தியிலிருந்து வெளியே வந்தாலும், தொடர்ந்து காங்கிரசுடன் உறவாடி கொண்டிருப்பவர் தி.மு.க, தலைவர் கருணாநிதி. கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டது சிறந்த எடுத்துக்காட்டு. 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி,மு.க.,வால் தமிழகத்துக்கு நன்மை ஏதும் இல்லை. மத்திய அரசின் மூலம் தனது குடும்பத்திற்கும், தனது கட்சிக்கும் என்ன நன்மை என சுயநலமாக சிந்தித்து, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுத்தார் என பேசினார்.

Comments