திருமணம்
நான் பஹதை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இது பெற்றோர் பார்த்து
நடத்தும் திருமணம். நாங்கள் இருவரும் சேர்ந்து தற்போது ஒரு படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறோம்.
காதல்
இந்த படத்தில் நடிக்கையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்து கொண்டோம்.
பின்னர் காதல் வயப்பட்டு எங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதம்
தெரிவித்துவிட்டோம். ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறுகிறது.
பாசில்
எனக்கு பஹதின் தந்தை பாசிலை குழந்தையில் இருந்தே தெரியும். எனக்கு பஹதை பற்றிய அனைத்துமே பிடிக்கும்.
தொண தொண
நான் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுடன் அதிகம் பேசுவேன். ஆனால் பஹத்
இருந்தால் மட்டும் நான் அமைதியாகவே இருப்பேன். அவருடன் நான் அதிகம் பேசியது
இல்லை. இருப்பினும் காதல் வந்தது. இவர் தான் உனக்கானவர் என்று என் மனம்
கூறியது.
நடிப்பு
திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதில் பஹதுக்கு பிரச்சனை இல்லை. நான் இது
குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நான் புதிய படங்கள் எதுவும்
ஒப்புக்கொள்ளவில்லை என்றார் நஸ்ரியா.
Comments