“இந்த முடிவை நான் இலகுவாக (Easy) எடுக்கவில்லை. அதே நேரத்தில், தென் ஆப்பிரிக்கா அணியை தொடர்ந்து பசியில் தள்ள விரும்பவில்லை; 2015 உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியும், திறமையையும் தயார்ப்படுத்த வேண்டி இருக்கின்றது.”
- ஜேக்கஸ் காலிஸ்
- ஜேக்கஸ் காலிஸ்
தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற வீரரான காலிஸ் சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ளவர். கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது அவரது பெரிய கனவாகும். அதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் 180 வருடகால பெருமை வாய்ந்த பள்ளிக்கூடமான, விளையாட்டு வீரர்களை உருவாக்கக்கூடிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். அந்தப் பள்ளிக்கூடம் பல திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கியுள்ளது.
உடனே பயிற்சியாளர் ரிச்சர்ட்ஸனிடம் போய் முறையிடுகிறார். அவர் நீ எல்லாம் அணியில் இடம் பெறமாட்டாய். பவுலிங், பேட்டிங், பீல்டிங் எதுவுமே உனக்கு வராது என்று அவரை விமர்சித்து அனுப்புகிறார். நீ எல்லாம் கிரிக்கெட் வீரராக வர மாட்டாய் என்று மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். காலிஸ் அதை கேட்டுவிட்டு அப்படியே இருந்து விடாமல், தொடர்ந்து முயற்சி செய்கிறார். தொடர்ந்து இரண்டு வருடம் கடின உழைப்பு (Hard Work) செய்கிறார். அதன் மூலம் அண்டர் நைன்டீன் (Under -19) அணியில் இடம் பெறுகிறார்.
அதன் பிறகு இண்டர்நேஷனல் அணியில் இடம் பெற்று 1995ல் விளையாடினார். அப்பொழுது அவருடைய பேட்டிங் என்பது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இல்லை. ஏனென்றால், அவர் அணிக்கு இடம் பெற்றது பவுலராகத்தான். அதுவரை காலிஸின் ஆட்டம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1997ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான்று ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது இன்னிங்ஸில் காலிஸின் நிதான ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணி டிரா செய்ய காரணமாக அமைந்தது. அதில் அவர் 101 ரன்கள் எடுத்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். அதில் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் காலிஸின் ஆட்டத்தைக் கண்டு வியந்தனர்.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியில் நம்பிக்கையை பெற்று பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் விளையாடி வந்த காலிஸ் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். அதேப்போன்று பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். ஒருமுறை ஸ்லிப் பகுதியில் நின்று அருமையான ஒரு கேட்சை ஒன்றை பிடித்தார். அது, அவருக்கு பீல்டிங்கிலும் நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது. பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என்று சிறப்பாக செயல்பட்டு ஆல் ரவுண்டர் (All Rounder) என்ற பட்டத்தையும் பெற்றார் காலிஸ். இதன் மூலம் கேப்டன் சுமித்தின் பிடித்த வீரராக ஜொலித்தார் காலிஸ்.
தொடர்ந்து இந்தியன் பிரிமீயர் லீக் (India Premier League - IPL) போட்டியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொல்கத்தா அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு காரணமாக இருந்தார் காலிஸ் என்றால் அது மிகையாகாது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஜேக்கஸ் காலிஸ் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரரான காலிஸ், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் “சுவர்” என்று வர்ணிக்கப்படும் காலிஸ் அதிரடி மற்றும் தடுப்பாட்டத்தில் சிறப்பு பெற்றவராக திகழப்பட்டு வருகிறார். இந்தியாவில் ராகுல் திராவிட் எப்படியோ, அதேப்போன்று காலிஸ் தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாகும்.
அவருடைய இந்த அறிவிப்பு தென் ஆப்பிரிக்கா மக்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிரணி வீரர்களின் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொள்ளும் காலிஸ், ஆடுகளத்தில் பொறுமையையே மேற்கொள்வார். இவருடைய ஆட்டம் என்பது ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமானதõகும். மூத்த ஜாம்பவான்களான லாரா, பாண்டிங், சச்சின் ஆகியோரின் வரிசையில் காலிசும் இணைந்து உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இவருக்கு கடைசிப் போட்டியாகும். காலிஸ் 18 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாடி வருகிறார். சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய காலிஸ் 13,289 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்பாக சச்சின் டெண்டுல்ர் 15,921 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் 13,378 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அதேப்போன்று, டெஸ்ட் சதங்களின் வரிசையில் 165 போட்டிகளில் விளையாடியுள்ள காலிஸ் 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 199 கேட்சுகள் பிடித்துள்ளார். 292 விக்கெட்டுகளை வீழ்த்தி 55.1 சராசரி வைத்துள்ளார் காலிஸ். காலிஸிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், எதிரணி வீரர்களின் பந்துகளை மடக்கி நிதானமாக ஆடுபவர். டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் சுவர்கள் என்று போற்றப்படும் லாரா, ரிக்க பாண்டிங், டிராவிட், சச்சின் ஆகியோர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.
கடைசி டெஸ்டில் சதம் அடித்த சாதனையாளர்களின் பட்டியலில் ஒட்டுமொத்தத்தில் 32வது வீரராகவும், தென் ஆப்பிரிக்க அளவில் 4வது வீரராகவும், காலிஸ் இணைந்துள்ளார். (பீட்டர் வான்டெர் பிஜ் (125 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 1939ம் ஆண்டு), பேரி ரிச்சர்ட்ஸ் (126 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1970), லீ இர்வின் (102 ரன், 1970) ஆகியோர் ஓய்வுக்கு முன்பாக தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆவார்.
எந்த நேரத்திலும் அவசரப்பட்டு விளையாடமல், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் இவர் வல்லவர். சச்சினுக்கு நிகரான காலிஸின் கிரிக்கெட் சகாப்தம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். இவரைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பாததால், இவருடைய கிரிக்கெட் வரலாறு அதிகம் பேசப்படாமல் உள்ளது.
ஆனால், இவருடைய திறமை மற்றும் வெற்றிகள் பிரமிப்பானவையாகும். 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் நினைத்திருந்தால் 2015 வரைக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இன்னும் பல உலக சாதனைகள் படைக்க முடியும்.
ஆனால், இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 1995ல் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாடி வரும் காலிஸின் சகாப்தம் (Era) மறக்க முடியாத ஒன்றாகும். அவருடைய சாதனைகள் ஒரு நாள் போட்டிகளில் தொடர நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
NELLAI SALEEM,
Cell - 96772 01727
Email - erusaleem@gmail.com
Comments