குறைகளை களையாவிட்டால் அரசை மக்கள் மாற்றுவார்கள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை

புதுடில்லி: தங்களின் குறைகளை களையாவிட்டால் அரசுகளை மக்கள் மாற்றுவார்கள் , ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் அரசுகளுக்கு எச்சரிக்கையாக வெளிவருகிறது என்று குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றினார்.


அவர் பேசுகையில்,ஜனநாயகம் நமக்கான அன்பளிப்பு அல்ல. குடிமகனின் அடிப்படை உரிமை. ஜனநாயக அமைப்புகள் திறமையின்மையால் நலவுறும் போது சினம் கொள்வது தவறல்ல. குறைகளை அரசு களையாவிட்டால், மக்கள் அரசுகளை மாற்றுவார்கள். . நமதுபொருளாதாரம் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவிய பொருளாதார தேக்கம் கவலைக்குரியது. ஆனால் நம்பிக்கையிழக்க தேவையில்லை. கடந்த 1950ம் ஆண்டில் குடியரசு பிறந்தது. 2014ம் ஆண்டில் அது நிச்சயம் புத்துயிர் பெறும்.போட்டியும் சேதமும் அடைந்த அரசியலுக்கு 2014ம் ஆண்டு அருமருந்தாக அமைய வேண்டும்.

ஊழல் நமது ஜனநாயகத்தை அளிக்கும் புற்றுநோயாக உள்ளது. இந்தியர்கள் கோபப்பட்டால் அவர்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரத்தாளும் அரசியல்நாமது நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது வாழ்வில் கபடம் அதிகரித்து வருவது ஆபத்தானது.

அரசு அறக்கட்டளை நடத்தும் ஸ்தாபனம் அல்ல. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 21ம் நூற்றாண்டில் இளைஞர்கள் கிராமங்களை உயர்த்துவார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் . அவர்கள் வியக்கத்தக்கஇந்தியாவை உருவாக்குவார்கள். இது நிலையான அரசு இல்லாமல் சாத்தியமில்லை.

மக்களை சந்திப்பவர்கள், சாத்தியமானவற்றையே மக்களுக்கு வாக்குறுதிகளாக வழங்க வேண்டும். மாயத்தோற்றங்களை உருவாக்க தேர்தல் முடிவுகள் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் எச்சரிக்கையாக வெளிவருகிறது. திறம்பட ஆட்சி செய்ய வேண்டியது அவசியம்.

கருத்துக்களில் உள்ள வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். நிலையற்ற அரசால், திடமற்ற சூழ்நிலையில் தான் உள்ளது. ஜனநாயக நாட்டில் விவாதங்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவது வரவேற்கத்தக்கது. நாம் ஒவ்வொருவரும் வாக்காளர்கள். நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. இந்தியாவை வீழ விடக்கூடாது. தற்போது கருத்துக்களை கேட்பதற்கும், விவாதிப்பதற்கான நேரம். நிலையற்ற அரசால், நாட்டில் பெரும் வீழ்ச்சி உண்டாகும் என கூறினார்.

Comments