கூடங்குளம் போராட்டக் குழு ஆம் ஆத்மியை ஆதரிக்க முடிவு

திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழுவினர் "ஆம் ஆத்மி' கட்சியை ஆதரிப்பது எனவும்பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.கூடங்குளம், இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள், பார்லி., தேர்தலில் யாரை ஆதரிப்பது என முடிவுசெய்ய மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினர். உதயக்குமார், புஷ்பராயன் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, மாவட்ட கடலோர, சமுதாயத் தலைவர்கள் பங்கேற்றனர். ஆம் ஆத்மி கட்சியில்இணைவது என்றும் அதற்கு உதயக்குமார் தமிழக கிளைக்கு தலைமை தாங்குவது என்பதும் விருப்பமாகஇருந்தது.
ஆனால் இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்ட தமிழர் பிரச்னைகளில் ஆம் ஆத்மியின்நிலைப்பாட்டை அறியவேண்டும் எனவும் அதற்கு ஆதரவு தெரிவித்தால்தான் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது எனவும், ஆம் ஆத்மி கட்சியுடன் போராட்டக்குழுவின் நிபந்தனைகள் குறித்துப் பேச்சு நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Comments