சென்னை: லோக்சபா தேர்தலில், கூட்டணி தொடர்பாக, முக்கிய முடிவு எடுக்க,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று வெளிநாடுக்கு புறப்பட்டு
செல்கிறார்.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லது பா.ஜ., அணியில்
கூட்டணி சேருவது குறித்து, இன்னும் முடிவெடுக்க முடியாமல், தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் தவித்து வருகிறார்.
அடுத்த மாதம், 2ம் தேதி,
உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள, 'ஊழல் ஒழிப்பு' மாநாட்டில், கூட்டணி
குறித்த முடிவை அறிவிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். ராஜ்யசபா தேர்தல்
அடுத்தமாதம், 7ம்தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம்,
31ம் தேதி இறுதிநாள் என்பதால், கூட்டணி குறித்த முடிவை, இம்மாதம்
இறுதிக்குள் எடுத்தாக வேண்டும் என்கிற நெருக்கடி, தே.மு.தி.க.,வுக்கு
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடும்ப நண்பர்கள் சிலர் விடுத்துள்ள
அழைப்பின் பேரில், இன்று அதிகாலை, விஜயகாந்த், வெளிநாடு பயணம்
மேற்கொள்கிறார். சிங்கப்பூர், மலேசியா, துபாய் நாடுகளில் அவர்
சுற்றுப்பயணம் செய்கிறார். வெளிநாடுகளில் வசிக்கும் தன் நெருங்கிய
நண்பர்களிடம் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி, முக்கிய முடிவு
எடுக்கவிருக்கிறார். இம்மாதம் இறுதியில், சென்னைக்கு திரும்பும்போது
யாருடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்கும் என்பதற்கான இறுதி வடிவம் பெற்று
விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments