''பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல்
குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக,
பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, 'துக்ளக்' வார இதழின் ஆசிரியர், சோ
ராமசாமி கூறினார்.
'துக்ளக்' வார இதழின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், சோ பேசியதாவது:
'ஊழல்
என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல' என, அரசியல் கட்சிகள்
கூறுகின்றன. அதை ஏற்றுக் கொண்டாலும், ஊழலில், பா.ஜ., முதல் வகுப்பு மாணவனாக
உள்ளது. காங்கிரஸ் - தி.மு.க., உட்பட, பல கட்சிகள், ஊழலில், பிஎச்.டி.,
பட்டம் பெற்றுள்ளன.'துக்ளக்' வார இதழின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், சோ பேசியதாவது:
எந்த பயனுமில்லை:
அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, டில்லியில், 28 சதவீத
ஓட்டுகளைபெற்றுள்ளது. அக்கட்சிக்கு எதிராக, 72சதவீத ஓட்டுகள் பதிவாகி
உள்ளன.ஆம் ஆத்மி, ஓட்டுகளை பிரிக்கும்கட்சியாகவே இருக்கும்; அதனால், எந்தப்
பயனும் இல்லை.கெஜ்ரிவால், அரசு அதிகாரியாக இருந்தவர். அவர்,
வெளிநாட்டுக்கு படிக்க சென்றது தொடர்பாக, அரசுக்கு பணம் கொடுக்க வேண்டிய
நிலையில், அதை செலுத்தவில்லை. நடவடிக்கை பாயும் என்ற நிலையில், அவர் பணத்தை
செலுத்தினார். அவரது கட்சியில் உள்ளவர்களும், பிற கட்சிகளில் இருந்து
வந்தவர்களே.
சரிந்து விட்டது:
அவர்கள்
மீதும், பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில நாட்களில், முன்னுக்குப்
பின் முரணாகப் பேசி, தன் முந்தைய நிலையை, கெஜ்ரிவால் மாற்றிக் கொண்டே
வருகிறார்.தமிழகத்தில், விஜயகாந்தின், தே.மு.தி.க.,வுக்கு, ஓட்டு வங்கி
இருந்தது. இப்போது, அது சரிந்து விட்டது. அக்கட்சி, யாருடன் கூட்டணி
சேர்ந்தாலும், அந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும் என, சொல்ல
முடியாது.தமிழகத்தில், திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தாலும்,
பயங்கரவாதத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.ஜெயலலிதா மீது
தொடரப்பட்ட,12 வழக்குகளில், 11 வழக்குகளில்,அவர் விடுதலை ஆகிவிட்டார்.
மீதமுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில்,அரசியல் தலையீடு உள்ளது.நீதிபதிகளை
மாற்றுவது, வழக்கறிஞர்களை மாற்றுவது போன்ற வேலைகளை, மத்திய அரசில்
செல்வாக்குப் பெற்றுள்ள, தி.மு.க., செய்கிறது. இந்த வழக்கில்,
ஜெயலலிதாவுக்கு எப்படியாவது தண்டனை கிடைத்து விடாதா என, அக்கட்சி எண்ணு
கிறது. ஆனால், சொத்துக் குவிப்புவழக்கிலும், ஜெயலலிதா விடுதலையாவார்.
வாய்ப்பு குறைவு:
தி.மு.க., குடும்பக் கட்சியாகி விட்டது. அக்கட்சியின் தலைவர், கருணாநிதியின்மீது, தொண்டர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. அது, இப்போது குறைந்து விட்டது. குடும்பக் கட்சியாக உள்ள, தி.மு.க.,வுக்கும், அதனுடன் கூட்டணி சேரும் கட்சிக்கும், லோக்சபா தேர்தலில், ஓட்டுப் போடக் கூடாது; அந்தக்கூட்டணியை வீழ்த்த வேண்டும்.மத்தியில், மூன்றாவது அணி வரும் என்பதற்கு வாய்ப்பில்லை. மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள, கட்சிகளுக்கு இடையே, ஒற்றுமை இல்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சிக்கு எதிரியாக உள்ளது. இக்கட்சிகள் இணைந்து, மூன்றாவது அணியை அமைக்க வாய்ப்பு குறைவு.தமிழகத்தில், கூட்டணிகள் உருவாவதில், குழப்பமான சூழல் உள்ளது. பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, சோ பேசினார்.
Comments