பாண்டிராஜ்
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இப்போது சிம்பு உடன் மீண்டும் ஜோடி
சேர்ந்துள்ளார் நயன்தாரா. அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே
நடிக்கிறாராம் நயன்தாரா. சிம்பு இந்துவாம்.
திருமண காட்சிகள்
இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற
காட்சிகளும் உள்ளதாம். அவர்கள் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ
முறைப்படியும் திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் உள்ளதாம்.
கனவு நனவாகிறது
நயன்- சிம்பு காதலர்களாக இருந்தபோது கண்ட கனவு நனவாகும் வகையில்
இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் சிம்பு-நயனதாரா இருவருமே
அந்த காட்சியில் மேக் அப் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.
பிரபு தேவா உடன் மீண்டும்
இந்த நேரத்தில், முதல் காதலரான சிம்புவுடன் மீண்டும் நடித்து வரும்
நயன்தாரா, இரண்டாவது காதலரான பிரபுதேவாவின் படத்தில் நடிக்கப் போவதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னிக்க மாட்டேன்
இதனால் டென்சன் ஆகியுள்ள நயன்தாரா, எனது முதல் காதலரை மன்னிக்கலாம். ஆனால்
இரண்டாவது காதலரை மன்னிக்க முடியாது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவரது
படத்தில் நான் நடிக்க வாய்ப்பே இல்லை என்று நறுக்கென்று சொல்லி வருகிறார்.
Comments