அமேதி தொகுதிக்கு விஜயம் செய்தபோது பேசிய
குமார் விஸ்வாஸ், நான் மற்ற தலைவர்களைப் போல, தலித் வீடுகளுக்குப் போய்
சாப்பாடு சாப்பிடுவது போல தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்க
மாட்டேன்.
என்னை ஜோக்கர் என்கிறார்கள். ராகுல் காந்தியை எதிர்த்து ஒரு ஜோக்கர்
போட்டியிடுவதா என்று கிண்டலடிக்கிறார்கள். ஜோக்கர்கள் பெரும்பாலும்
நல்லவர்களாகவே இருப்பார்கள். ஜோக்கர்கள், நாட்டை விற்க மாட்டார்கள்.
மேலும் சோனியா காந்தி மகாராணி போல செயல்படுகிறார். அமெரிக்காவுக்கு
சிகிச்சைக்காக பலமுறை போய் வந்துள்ளார். நமது நாட்டு மருத்துவர்கள் மீது
அவருக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கையில் நாம் எப்படி அவரது மகனை
நம்புவது.
அமேதியில் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். எங்களுக்கு சவால்
விட்டுள்ளனர். அதை சந்திப்போம் என்றும் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்க
மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.
Comments