தமிழகத்தில் 'வெற்றி கூட்டணி' அமையும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

தமிழகத்தில் 'வெற்றி கூட்டணி' அமையும்: ஜி.கே.வாசன் நம்பிக்கைமதுரை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமையும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், இல்லந்தோறும் கைச் சின்னம் என்ற சிறந்த லட்சியத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.


அதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். அனைவருக்கும் உணவு, கட்டாயக் கல்வி, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளது.

ஆகவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். தமிழகத்தைப் பொறுத்த வரை வெற்றிக் கூட்டணி அமையும். தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் தலைமையால் வெளியிடப்பட உள்ளது என்றார்.

Comments