
உடல் தானம், ரத்த தானம் செய்தவர்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்
கொள்ளலாம், என, நடிகை நமீதா அறிவித்துள்ளார். சென்னை, கேளம்பாக்கம்
கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை நமீதா பங்கேற்றார். அங்கு, மாணவ,
மாணவியர் ரத்தானம், உடல் தானம் செய்ததை பார்த்து பெருமைப்பட்டார்.
மாணவர்
சந்திப்பில், நமீதா பேசியதாவது:
மாணவ, மாணவியர் சமூக அக்கறையோடு,
ரத்ததானம், உடல் தானம் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் காலம் எனக்கு
நம்பிக்கை தருகிறது. படிப்போடு, சம்பாதிப்பதோடு, சமூகம் சார்ந்த
சிந்தனையும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்களை நான்
பாராட்டுகிறேன்.ரத்த தானம் அல்லது உடல் தானம் செய்தவர்கள், என்னை, எப்போது
வேண்டுமானாலும் சந்திக்கலாம்; புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். என்னை
சந்திக்க வரும்போது, ரத்த தானம் அல்லது உடல் தானம் செய்ததற்கான சான்றிதழ்
கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, நமீதா பேசினார்.
Comments