அந்தமான் அருகே நடந்த படகு விபத்தில் 8 தமிழர்கள் பலி

போர்ட்பிளேயர்: அந்தமான் அருகே உள்ள ராஸ் தீவு பகுதிக்கு சுற்றுலா சென்ற போது நிகழந்த படகு விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இவ்விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 8 தமிழர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். சுற்றுலா பயணிகள் சென்ற படகில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 32 பேர் மற்றும் மும்பையை சேர்ந்த ஏழு பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. படகில் உயிர் காக்கும் சாதனங்கள் இல்லாததால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments