காபூல்: ஆப்கனில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழுவினரை
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுட்டதில் கிரிக்கெட் வீரர்கள் 5
பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானின் ஆலிங்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஒரு குழுவினர்
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிரிக்கெட் வீரர்களை நோக்கி சரமாரியாகச்
சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
இத்தகவலை அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இக்கொடூரத்
தாக்குதலுக்கு அந்நாட்டுப் பிரதமர் ஹமீத் கர்சாய் தனது கண்டனத்தைத்
தெரிவித்துள்ளார்.
இப்படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், கிரிக்கெட் மற்றும்
பொது விழாக்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபன்களின்
வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
Comments