புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலின், 'இமேஜை' மேம்படுத்த,
ஜப்பானிய நிறுவனம் ஒன்று அமர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை,
காங்கிரஸ் மறுத்துள்ளது. 'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை' என, அக்கட்சித்
தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் தலைமையில் பிரசாரம் நடந்தது.
தேர்தல் முடிவில், நான்கு மாநிலங்களில், காங்கிரஸ்
படுதோல்வி அடைந்தது.இதனால், ராகுலின் மதிப்பு, கவுரவம், இமேஜ்
குறைந்துள்ளதாகவும், அதை சரி செய்ய, ஜப்பானின், 'டென்சு' என்ற நிறுவனம்
அமர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.இதை, காங்கிரஸ் நேற்று
மறுத்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் தலைமையில் பிரசாரம் நடந்தது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான, ரந்தீப் சுரஜ்வாலா நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:ராகுலின் இமேஜை மேம்படுத்த, தனியார் நிறுவனங்களின் உதவி தேவையில்லை. அவருக்கு, காங்கிரசின் கொள்கை மீதான பலம், இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்கள், கட்சியினர் ஆதரவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளாரள்.
மற்றொரு முக்கிய தலைவரான, அஜய் மாக்கேன் கூறும் போது, ''ராகுலின் இமேஜை மேம்படுத்த, 500 கோடி ரூபாய் செலவிடப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை; அவ்வளவு பணம், எங்கள் கட்சியில் இல்லை,'' என்றார்.
Comments