புதுடில்லி: லோக்சபா தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக பிப்.4-ம் தேதி
அனைத்துக்கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் கமிஷன் கூட்ட உள்ளது. நடப்பு
லோக்பா எம்.பி.க்களின் பதவி காலம் மே மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து
விரைவில் அடுத்த லோக்சபா தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட
உள்ளது.
இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவதற்காகவும்,தேர்தல்
முன்னேற்பாடுகள் குறித்தும், வரும் பிப். 4-ம் தேதி தேர்தல் கமிஷன்
அனைத்துக் கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் கமிஷன் கூட்ட உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து
கொள்கின்றன. இக்கூட்டத்தின் போது தேர்தலை நியாயமாகவும், சுமூகமாவும்
நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
Comments