வீரம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல்
செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு
கிடைத்துள்ளது.
வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கோவையில் படம் ரிலீஸான
மறுநாள் கூடுதல் தியேட்டர்களில் வீரம் திரையிடப்பட்டது. மகேஷ் பாபுவின் நே
ஒக்கடினே தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் வீரம் படத்திற்கு
கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.
வார இறுதி நாட்களில் வீரம் படம் இந்தியாவில் மட்டும் ரூ.17.8 கோடி
வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது.
வீரம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி
வசூலித்துள்ளது. வீரம் ரிலீஸான தியேட்டர்கள் முன்பு எல்லாம் அஜீத்தின்
பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
வார இறுதி நாட்களில் வீரம் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி
வசூலித்துள்ளது.
Comments