
ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 3வது ஒருநாள்
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா
உள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நடைபெற்ற 2 ஒருநாள்
போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. நேப்பியரில் நடைபெற்ற முதலாவது
ஒருநாள் போட்டியில் 24 ரன்களிலும் ஹாமில்டனில் நடைபெற்ற 2வது ஒருநாள்
போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை இந்தியா தழுவியது.
எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை இந்தியா கைப்பற்ற
முடியும். நாளைய போட்டியில் தோல்வியைத் தழுவினால் தொடரை இழந்துவிடும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் கோஹ்லிதான் ஜொலிக்கிறார். ரெய்னா
இன்னமும் சோபிக்கவில்லை. பின்வரிசை வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை
தொடர்கின்றனர்.
டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் நடைபெற்ற கடந்த 5
ஒருநாள் போட்டிகளில் 4-ல் தோல்வியை தழுவியிருக்கிறது. நாளைய போட்டியில்
வெல்லாமல் போனால் தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்திலும் தொடரை
இழந்த அவப்பெயரை இந்திய அணி சந்திக்க நேரிடும்.
இதனால் இந்திய அணி நாளை விவேகமான- வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக
வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Comments