லோக்சபா தேர்தல்: அதிமுக -33%, திமுக 27%, பாஜக 18%, தேமுதிக 7% ஆதரவு- குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை ஏடு நடத்திய கருத்து கணிப்பில் அதிமுகவுக்கு 33%, திமுகவுக்கு 27% ஆதரவு இருப்பதாக \தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக 18% ஆதரவுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு கருத்து கணிப்புகள் அணிவகுத்து வருகின்றன. இதில் குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை ஏடும் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இக்கருத்து கணிப்பில் அனைத்து கட்சிகளுக்குமான ஆதரவு சதவீதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக முன்னிலை
 
இதில் அதிமுக 33.1% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. 2வது இடத்தில் திமுக 26.5% வாக்குகள் பெற்றுள்ளது.

3வது இடத்தில் பாஜக
 
3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறதாம். இக்கட்சிக்கு 17.8% ஆதரவு உள்ளதாம்.

தேமுதிகவுக்கு 7.3%
 
தேமுதிக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு 7.3% ஆதரவு இருப்பதாக கூறுகிறது கருத்து கணிப்பு.

பாமகவுக்கு 5%
 
பாமக 5.1% ஆதரவுடன் 5வது இடத்திலும் 4.3% ஆதரவுடன் காங்கிரச் 6வது இடத்திலும் இருக்கிறதாம்.

கடைசிதான் மதிமுகவுக்கு
 
மதிமுகவுக்கு 2.3% ஆதரவுதான் இருக்கிறதாம். 18 முதல் 40 வயது வரையிலானோர்.. இதில் 18 முதல் 40 வயது வரையிலானோர் ஆதரவு விவரம்: அதிமுக-31.5%, திமுக- 24.6%, பாஜக- 19.1%, தேமுதிக- 8.3%, பாமக- 5.8%, காங்கிரஸ்-3.5%.

40 வயதுக்கு மேற்பட்டோர்
 
40 வயதுக்கு மேற்பட்டோரின் ஆதரவு நிலை: அதிமுக- 35.5%, திமுக 30.1%, பாஜக- 15%, தேமுதிக 5.5%, பாமக - 4.1%, காங்கிரஸ்- 5.5%.

Comments